Print this page

தமிழ் அன்பர் மகாநாடு. புரட்சி - செய்தி விளக்கம் - 17.121933 

Rate this item
(0 votes)

அதிகாரிகள் மறுப்பு 

தமிழன்பர் மகாநாடு என்ற பார்ப்பனர் சூழ்ச்சி மகாநாட்டு சார்பில் நடைபெறப் போகிற புத்தகக் காட்சியை திறந்து வைப்பதாக வெளியிட்டி ருந்த கல்வி இலாக்கா தலைவர், டைரக்டர் ஆப் பப்பிளிக் இன்ஸ்ட்ர ஷன் என்னும் அதிகாரியானவர் இப்போது மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் அவருக்கு பதிலாக இராமநாதபுரம் இராஜாவை அந்தக் காட்சியை திறந்து வைக்கக் கேட்டு அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே மிகச்சிறு வயதுள்ளவரான ஒரு பெரியாரைத் தேடிப்பிடித்தது மிக புத்திசாலித்தனமான காரியமென்பதற்காக பாராட்டுகிறோம். 

புரட்சி - செய்தி விளக்கம் - 17.121933

 
Read 85 times